தமிழ் காலப்போக்கு யின் அர்த்தம்

காலப்போக்கு

பெயர்ச்சொல்

 • 1

  காலம் கழிந்துசெல்லுதல்.

  ‘சில நகரங்கள் காலப்போக்கில் பூமிக்கடியில் புதையுண்டன’
  ‘இந்தக் கோயிலைப் பற்றிப் பல கட்டுக்கதைகள் காலப்போக்கில் எழுந்துவிட்டன’

 • 2

  குறிப்பிட்ட காலத்தில் நிலவும் சூழ்நிலை, தன்மை போன்றவை.

  ‘மக்களின் மனநிலை, நாட்டுச் சூழல், காலப்போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இயக்குனர்கள் திரைப்படம் எடுக்கின்றனர்’
  ‘காலப்போக்குக்கு ஏற்றவாறு நாகரிகமும் மாறிவருகிறது’
  ‘காலப்போக்கை உணர்ந்து வாழக் கற்றுக்கொண்டால் முதுமைக் காலம் இனிமை நிறைந்ததாக இருக்கும்’