தமிழ் காலம் யின் அர்த்தம்

காலம்

பெயர்ச்சொல்

 • 1

  நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இடைவிடாமல் தொடர்வதுமான (நான்காவது பரிமாணமான) ஒன்று.

  ‘காலமும் தூரமும் ஒன்றுதான் என்பது இயற்பியல் உண்மை’

 • 2

  (ஆண்டில் தட்பவெப்ப மாறுதல்களை அடிப்படையாகக் கொண்டோ வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டோ மனிதரின் வாழ்க்கை நிலைகளை அடிப்படையாகக் கொண்டோ) சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.

  ‘கற்காலம்’
  ‘சங்க காலம்’
  ‘பிற்காலச் சோழர்கள் காலம்’
  ‘குளிர் காலம்’
  ‘இளமைக் காலம்’
  ‘எங்கள் பாட்டனார் காலத்தில் வாங்கிய கடிகாரம் இது’

 • 3

  (ஒருவரின்) வாழ்நாள்/(ஒருவரின் வாழ்நாளில் ஒன்றைச் செய்வதற்கு) ஏற்றதாகக் கருதப்படும் நேரம்.

  ‘என் காலத்தில் நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுவிட்டேன்; உங்கள் காலத்திலாவது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்’
  ‘காலம் வந்தால் எல்லாம் நடக்கும்’

 • 4

  இலக்கணம்
  ஒரு வினைச்சொல் குறிக்கும் செயல் எப்போது நிகழ்ந்தது அல்லது நிகழ்கிறது அல்லது நிகழும் என்பதைக் காட்டும் இலக்கணக் கூறு.

  ‘‘இல்’ என்னும் வினை காலம் காட்டாது’

 • 5

  இசைத்துறை
  (ஒரு பாடல் அல்லது பாடலின் பகுதி) அமைக்கப்பட்டிருக்கும் வேகம்.

  ‘இந்தப் பாடலின் முதல் வரியை முதல் காலத்தில் பாடினால் நன்றாக இருக்கும்’