தமிழ் காலம்தள்ளு யின் அர்த்தம்

காலம்தள்ளு

வினைச்சொல்-தள்ள, -தள்ளி

  • 1

    (மனக்குறையுடன் மகிழ்ச்சி இல்லாமல்) வாழ்க்கை நடத்துதல்.

    ‘வட இந்தியாவில் இருக்கும்வரை ரொட்டியைச் சாப்பிட்டே காலம்தள்ள வேண்டியதாயிற்று’
    ‘இனிமேலும் உன்னோடு காலம்தள்ள முடியாது என்பது நிச்சயமாகிவிட்டது’