தமிழ் கால்வாய் யின் அர்த்தம்

கால்வாய்

பெயர்ச்சொல்

  • 1

    பாசனத்துக்காக அல்லது போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட நீர் வழிப்பாதை.

    ‘அணையிலிருந்து கால்வாய்களின் வழியாக நிலங்களுக்கு நீர் பாய்கிறது’

  • 2

    இரு நிலப்பகுதிகளை இணைக்கும் நீர்வழி.

    ‘பனாமாக் கால்வாய் வடஅமெரிக்காவுக்கும் தென்அமெரிக்காவுக்கும் இடையே இருக்கிறது’