தமிழ் கால்வை யின் அர்த்தம்

கால்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  (முதல் முறையாக) நுழைதல்; (நீண்ட இடைவெளிக்குப் பிறகு) வருதல்.

  ‘மருமகள் நம் வீட்டில் கால்வைத்ததிலிருந்து வீடு கலகலப்பாக இருக்கிறது’
  ‘பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மண்ணில் கால்வைத்தேன்’

 • 2

  (தொழில், வியாபாரம் போன்ற துறைகளில்) நுழைதல்; ஈடுபடுதல்.

  ‘அவர் கால்வைக்காத வியாபாரமே இல்லை என்று சொல்லலாம்’
  ‘தொலைக்காட்சித் தயாரிப்பிலும் அவர் கால்வைக்கப் போகிறார்’