தமிழ் காலாவதியாகு யின் அர்த்தம்

காலாவதியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

 • 1

  (ஏதேனும் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு) முடிவுக்கு வருதல்.

  ‘அவரோடு செய்துகொண்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது’
  ‘தொழில் துவங்க வழங்கப்பட்ட உரிமம் காலாவதியாக ஒரு மாதமே இருக்கிறது’

 • 2

  நடைமுறையில் இல்லாமல்போதல்.

  ‘திருமணச் சடங்குகளில் பல இன்று காலாவதியாகிவிட்டன’