காலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காலி1காலி2

காலி1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (வீடு, வாகனம், இருக்கை போன்றவற்றில்) ஆள் இல்லாத நிலை; (நிறுவனத்தில், பதவியில்) ஆள் நியமிக்கப்படாத நிலை.

  ‘ஒரு வருடம் காலியாகக் கிடந்த வீட்டில் இன்றுதான் யாரோ புதிதாகக் குடிவந்திருக்கிறார்கள்’
  ‘எதிரில் கிடந்த காலி நாற்காலியில் உட்காரச் சொன்னார்’
  ‘உங்கள் அலுவலகத்தில் ஒரு வேலை காலி என்று கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்’
  ‘இரவு நேரமாகிவிட்டதால் பேருந்துகள் காலியாக ஓடிக்கொண்டிருந்தன’

 • 2

  (பெட்டி, பாத்திரம் போன்றவற்றில்) பொருள் இல்லாத நிலை.

  ‘காலிப் பெட்டியில் சட்டைகளையெல்லாம் மடித்துவைத்தான்’
  ‘காலியான குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன’

 • 3

  (ஓர் இடத்தைக் குறிப்பிடும்போது) பயன்படுத்தப்படாத, ஒருவருக்கும் உரிமை இல்லாத நிலை.

  ‘காலி மனைகள் ஏலம் விடப்படும்’
  ‘காலியாக உள்ள இடங்கள் ஏழைகளுக்கு வீடு கட்டக் கொடுக்கப்படும்’

 • 4

  ஒன்று தீர்ந்துவிடும் நிலை.

  ‘பணம் காலி’
  ‘பாத்திரத்தில் இருந்த தண்ணீர் காலி’

 • 5

  பேச்சு வழக்கு ஒருவர் நொடித்துப்போகும் அல்லது உயிர் இழக்க வேண்டிய நிலை.

  ‘அவரை எதிர்த்துப் போட்டியிட்டால் நான் காலி’
  ‘படம் ஒரு வாரம் கூட ஓடாததால் வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்த தயாரிப்பாளர் காலி’
  ‘கார் விபத்தில் நாலு பேர் காலி’

காலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காலி1காலி2

காலி2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு அடாவடித்தனமாக நடந்துகொள்பவன்; ரவுடி.

  ‘தெரு விளக்குகளைக் கல் எறிந்து உடைத்த காலிகள் கைது’