தமிழ் காளான் யின் அர்த்தம்

காளான்

பெயர்ச்சொல்

 • 1

  மழை பெய்ததும் நிலத்தில் மிக வேகமாக முளைக்கும் ஒரு வகைச் சிறிய தாவரம்.

  ‘சில வகைக் காளான்கள் விஷமுடையவை’
  ‘இப்போது காளான் உற்பத்தி லாபகரமான தொழிலாக உருவாகிவிட்டது’
  ‘ஆங்கிலம் கற்பிக்கும் மழலையர் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகிவிட்டன’

 • 2

  ஈரப் பொருள்களின் மேல் படரும், தோலின் மேல் தோன்றி நோயை உண்டாக்கும், சாம்பல் தூவியது போல் வளரும், தாவர வகையைச் சேர்ந்த ஒரு வகை உயிரினம்; பூஞ்சணம்.

  ‘சுவர் எங்கும் காளான் பூத்திருக்கிறது’