தமிழ் காவடியெடு யின் அர்த்தம்

காவடியெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    நேர்த்திக்கடனாகக் காவடியை எடுத்துச் சென்று காணிக்கையைக் கோவிலுக்குச் செலுத்துதல்.

    ‘இந்தத் தைப் பூசத்திற்குத் திருத்தணி முருகனுக்குக் காவடியெடுப்பதாக நேர்ந்துகொண்டிருக்கிறேன்’

  • 2

    பேச்சு வழக்கு (உயர்நிலையில் உள்ள ஒருவரைப் பார்ப்பதற்காக) பலமுறை போக நேரிடுதல்.

    ‘அமைச்சரைப் பார்க்க எத்தனை முறை காவடியெடுக்க வேண்டியிருக்கிறது!’