கிட -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிட1கிட2

கிட1

வினைச்சொல்கிடக்க, கிடந்து

 • 1

  (ஒன்றின் மேலோ ஒரு பரப்பிலோ ஒன்று) படிந்த நிலையில் இருத்தல்.

  ‘அறையில் கிடந்த பொம்மைகளை எடுத்து வைத்தேன்’
  ‘கொடியில் கிடக்கும் துணியை எடு’
  ‘குடித்துவிட்டு வந்து தெருவில் கிடக்கிறான்’
  ‘வாசலில் சாணி கிடக்கிறது’

 • 2

  (நோய்வாய்ப்பட்டு) படுத்திருத்தல்.

  ‘ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தேன்’
  ‘பெரியவர் படுத்தபடுக்கையாகக் கிடக்கிறார்’

 • 3

  (படர்க்கை வினைமுற்று வடிவங்களில் மட்டும்) (குறிப்பிட்ட சூழலில் ஒருவரை அல்லது ஒன்றை) பொருட்படுத்தத் தேவையில்லை என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.

  ‘அவர் கிடக்கிறார், நீ வேலையைக் கவனி’
  ‘‘என் மாற்றல் விஷயம் கிடக்கட்டும், உங்கள் பையனுக்கு வேலை கிடைத்துவிட்டதா?’’

 • 4

  (‘சும்மா’, ‘பேசாமல்’ போன்ற சொற்களை அடுத்து வரும்போது) வெறுமனே இருத்தல்.

  ‘‘வாயை வைத்துக்கொண்டு சும்மா கிடக்காமல் எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பார் என் அப்பா’ என்றான் அவன்’
  ‘புலம்பிக்கொண்டிருந்த தன் மகளை ‘பேசாமல் கிட’ என்று அதட்டினாள்’

கிட -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிட1கிட2

கிட2

துணை வினைகிடக்க, கிடந்து

 • 1

  முதன்மை வினை ஒரு செயலின் நிலையைக் குறிக்கிறது என்பதை அழுத்திக் கூறும் ஒரு துணை வினை.

  ‘கதவு திறந்துகிடந்தது’
  ‘கொடிகள் ஒன்றோடொன்று பின்னிக்கிடந்தன’
  ‘ஊர் அமைதியில் ஆழ்ந்துகிடந்தது’