தமிழ் கிட்டத்தட்ட யின் அர்த்தம்

கிட்டத்தட்ட

வினையடை

 • 1

  பெரும்பாலும்; அநேகமாக.

  ‘வீடு கட்டும் வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது’

தமிழ் கிட்டத்தட்ட யின் அர்த்தம்

கிட்டத்தட்ட

பெயரடை

 • 1

  ஏறக்குறைய.

  ‘இந்த ஓவியத்தை முடிக்கக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகிவிட்டது’
  ‘கிட்டத்தட்ட எல்லோரும் வந்துவிட்டார்கள்’
  ‘பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட அப்பா மாதிரியே இருந்தான்’