தமிழ் கிட்டு யின் அர்த்தம்

கிட்டு

வினைச்சொல்கிட்ட, கிட்டி

 • 1

  (ஒருவருக்கு ஒன்று) வந்துசேர்தல்; வந்தடைதல்; கிடைத்தல்.

  ‘மனத்திற்குப் பிடித்த செயலைச் செய்யும்போது கிட்டும் இன்பமே தனி’
  ‘அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது’
  ‘திட்டம் நிறைவேறியதால் மக்களுக்கு நல்ல பயன் கிட்டியுள்ளது’
  ‘இந்த வாய்ப்பு யாருக்குக் கிட்டும்?’

தமிழ் கிட்டு யின் அர்த்தம்

கிட்டு

வினைச்சொல்கிட்ட, கிட்டி

 • 1

  (குளிர், காய்ச்சல், வலிப்பு நோய் முதலிய காரணங்களால் தாடை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்) இறுகுதல்.

  ‘காய்ச்சலில் அப்படியே பற்களெல்லாம் கிட்டிக்கொண்டன’
  ‘பல் கிட்டும் அளவுக்குக் குளிர்’