தமிழ் கிடத்து யின் அர்த்தம்

கிடத்து

வினைச்சொல்கிடத்த, கிடத்தி

  • 1

    (குழந்தையை மடியில், கட்டிலில் அல்லது தரையில்) படுக்க வைத்தல்; (உணர்வு இழந்தவரை, நோயாளியை அல்லது பிணத்தை) படுத்த நிலையில் போடுதல்.

    ‘குழந்தையை மடியில் கிடத்திப் பால் கொடுத்தாள்’
    ‘அறுவைச் சிகிச்சைக்காக மேசையின் மேல் நோயாளி கிடத்தப்பட்டார்’