தமிழ் கிடுகிடுவென்று யின் அர்த்தம்

கிடுகிடுவென்று

வினையடை

 • 1

  (ஒரு செயலைச் செய்யும்போது) மளமளவென்று.

  ‘நேரமாகிறது, கிடுகிடுவென்று புறப்படு!’
  ‘கிடுகிடுவென்று வேகமாக நடந்தான்’
  ‘தேர்வுக்குப் போவதற்கு முன் ஒரு முறை பாடத்தைக் கிடுகிடுவென்று பார்த்துக்கொள்!’

 • 2

  (பொருள்களின் விலை ஏற்றம் அல்லது இறக்கத்தைக் குறிக்கையில்) மிக விரைவாக.

  ‘நெல் விலை கிடுகிடுவென்று இறங்கிவிட்டது’