தமிழ் கிண்டு யின் அர்த்தம்

கிண்டு

வினைச்சொல்கிண்ட, கிண்டி

 • 1

  (மனிதர்கள் கம்பு, கை, கரண்டி முதலியவற்றாலும், பறவைகள் காலாலும் ஒன்றை) மேல்கீழாகவோ பக்கவாட்டிலோ புரட்டுதல்; கிளறுதல்.

  ‘வெல்லப் பாகில் மாவைப் போட்டவுடன் கரண்டியால் கிண்டவும்’
  ‘நெல்லைக் கிண்டிக்கிண்டி நகம் தேய்ந்துவிட்டது’
  ‘கோழி குப்பையைக் கிண்டித் தெருவில் இறைத்திருக்கிறது’
  உரு வழக்கு ‘பழைய நினைவுகளைக் கிண்டாதே!’

 • 2

  (உப்புமா, அல்வா போன்ற உணவு வகைகளைக் கரண்டியால் கிளறி) தயாரித்தல்.

  ‘உப்புமா கிண்டவா, தோசை சுடவா?’

 • 3

  துருவிப் பார்த்தல்.

  ‘எழுதிவைத்திருந்த கணக்கில் சந்தேகம் ஏற்பட்டவுடன் அவர் என்னைக் கிண்டிக் கேட்க ஆரம்பித்துவிட்டார்’

தமிழ் கிண்டு யின் அர்த்தம்

கிண்டு

வினைச்சொல்கிண்ட, கிண்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தோண்டுதல்.

  ‘கிணறு கிண்டினால் ஒரே மக்கியாக வருகிறதே!’
  ‘பத்தடி விட்டுக் கிண்டு’
  ‘பனம் பாத்தியைக் கிண்ட எப்போது வருகிறாய்?’