தமிழ் கிரகி யின் அர்த்தம்

கிரகி

வினைச்சொல்கிரகிக்க, கிரகித்து

 • 1

  மனத்தில் வாங்குதல்.

  ‘நான் சொல்லவந்ததை அவர் கிரகித்துக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை’
  ‘குழந்தைகள் மொழியைக் கிரகிக்கத் தொடங்குவது ஓர் இயற்கையான நிகழ்வு’

 • 2

  ஒருவர் சொல்வதிலிருந்து அவர் சொல்லாத தகவல்களையும் ஊகித்து அறிதல்.

  ‘அவனிடம் பேசிக்கொண்டிருந்ததில் நான் கிரகித்த விஷயங்கள் இவ்வளவுதான்’

 • 3

  (ஒளி, ஒலி அலைகளைச் சாதனங்கள் போன்றவை) வாங்கிக்கொள்ளுதல்; பெறுதல்.

  ‘விமானம் அனுப்பும் சமிக்ஞைகளைக் கிரகித்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இந்தக் கருவி செயல்படுகிறது’

 • 4

  உறிஞ்சுதல்.

  ‘சிறுகுடலில் இருக்கும் குடலுறிஞ்சிகள் உணவில் உள்ள சத்துகளைக் கிரகித்துக்கொள்கின்றன’
  ‘மழை நீரைத் தேக்கிவைக்காமல் அப்படியே கிரகித்துவிடும் திறன் கொண்டது செம்மண் பூமி’