தமிழ் கிரீடம் யின் அர்த்தம்

கிரீடம்

பெயர்ச்சொல்

  • 1

    (கடவுள் விக்கிரகத்திற்கு) அலங்காரமாகச் சூட்டப்பட்டிருக்கும் அல்லது (அரசன், அரசி போன்றோர் தங்கள்) அதிகாரத்தின் சின்னமாகத் தலையில் வைத்துக்கொள்ளும் (பெரும்பாலும் தங்கத்தால் செய்த) அணி; மகுடம்.

    ‘மதுரை மீனாட்சி அம்மனுக்குப் புதிதாக வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டது’

  • 2

    அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அணிவிக்கப்படும், கல் பதித்த அலங்காரத் தலை அணி.

    ‘உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்குக் கிரீடம் சூட்டப்பட்டது’