தமிழ் கிறங்கு யின் அர்த்தம்

கிறங்கு

வினைச்சொல்கிறங்க, கிறங்கி

 • 1

  (ஒருவர் தூக்கம், போதை முதலியவற்றால்) நிலைதடுமாறுதல்; மயங்குதல்.

  ‘கஞ்சாவின் போதையில் கிறங்கிக்கொண்டிருந்தான்’
  உரு வழக்கு ‘எஸ்.ஜி. கிட்டப்பாவின் குரலில் கிறங்காத ரசிகர் உண்டோ?’

 • 2

  பேச்சு வழக்கு சோர்வடைதல்.

  ‘வெயிலில் நடந்து வந்ததால் குழந்தை கிறங்கிப்போய்விட்டான்’