தமிழ் கிலுக்கு யின் அர்த்தம்

கிலுக்கு

வினைச்சொல்கிலுக்க, கிலுக்கி

 • 1

  (ஒன்றை) ஆட்டுதல்; அசைத்தல்.

  ‘அவர் வீட்டில் மணி கிலுக்கித்தான் பூசை செய்வார்’
  ‘உண்டியலை அடிக்கடி கிலுக்கிப்பார்த்துக்கொண்டேயிருப்பான்’
  உரு வழக்கு ‘திடீரென்று வசதி வந்தவுடன் கிலுக்கிக்கொண்டு திரிகிறான்’

தமிழ் கிலுக்கு யின் அர்த்தம்

கிலுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  கிலுகிலுப்பை.