தமிழ் கில்லாடி யின் அர்த்தம்

கில்லாடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மிகுந்த சாமர்த்தியம் உடையவர்.

  ‘குழந்தைகள் கில்லாடிகள்தான்; காணாமல் போன நகையை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்களே!’
  ‘நீ பேச்சில் கில்லாடி; உன்னையா ஜெயிக்க முடியும்!’

 • 2

  பேச்சு வழக்கு சாமர்த்தியமாகக் குற்றம்புரியும் நபர்.

  ‘நூதன முறையில் பல பேரை ஏமாற்றிய கில்லாடி பிடிபட்டான்’