தமிழ் கிளர்ச்சி யின் அர்த்தம்

கிளர்ச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (உள்ளத்தின்) உணர்ச்சிமயமான மனநிலை; எழுச்சி.

  ‘நாடகத்தின் உச்சக்கட்டம் பார்வையாளர்களுக்குப் பரபரப்பையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்தது’
  ‘அவருடைய கனல் தெறிக்கும் பேச்சால் நான் அடைந்த உள்ளக் கிளர்ச்சியைச் சொல்லி முடியாது’

 • 2

  (அதிகாரத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும்) போராட்டம்.

  ‘ஊதிய உயர்வு வேண்டி அரசு அலுவலர்கள் கிளர்ச்சி செய்துவருகிறார்கள்’
  ‘அடக்குமுறையால் நாட்டில் பெரும் கிளர்ச்சி எழுந்தது’

 • 3

  அதிகார வர்க்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திக் குழுவாகப் போராடும் போக்கு.

  ‘மன்னர் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சி’

 • 4

  சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மதிப்பீடுகளை எதிர்க்கும் போக்கு.

  ‘ஆல்பெர் காம்யுவின் எழுத்து கிளர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்’