தமிழ் கிளறு யின் அர்த்தம்

கிளறு

வினைச்சொல்கிளற, கிளறி

 • 1

  கிண்டுதல்.

  ‘வெல்லப் பாகில் மாவைப் போட்டவுடன் கரண்டியால் கிளறவும்’
  ‘கோழி குப்பையைக் கிளறித் தெருவில் இறைத்திருக்கிறது’

 • 2

  (கிண்டி) தயாரித்தல்.

  ‘காலை உணவிற்கு உப்புமா கிளறிவைத்திருக்கிறேன்’

 • 3

  (ஒருவருடைய கோபம், வெறுப்பு, சிந்தனை முதலியவற்றை) தூண்டுதல்.

  ‘அவளுடைய நடவடிக்கை கோபத்தைக் கிளறுவதாகவே இருக்கிறது’

 • 4

  (நடந்து முடிந்த கசப்பான செய்தியை மீண்டும்) நினைவுக்குக் கொண்டுவருதல்; எழுப்புதல்.

  ‘முடிந்துபோன பிரச்சினையை மீண்டும் கிளறாதீர்கள்’