தமிழ் கிள்ளு யின் அர்த்தம்

கிள்ளு

வினைச்சொல்கிள்ள, கிள்ளி

 • 1

  (இலை, காம்பு முதலியவற்றை) நகத்தால் துண்டாக்குதல்.

  ‘வெற்றிலைக் காம்பைக் கிள்ள நினைத்தவர் பேசிக்கொண்டே புகையிலையைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டார்’
  ‘கொடியிலிருந்து காய்ந்துபோன இலைகளைக் கிள்ளி எறிந்தார்’

 • 2

  கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் தசையைப் பிடித்து வலிக்கும்படி நெருக்குதல்.

  ‘எங்கள் ஆசிரியர் கிள்ளினால் வலி பொறுக்க முடியாது’

 • 3

  (பசி வயிற்றை, சொற்கள் மனத்தை) வலிக்கச் செய்தல்; வருத்துதல்.

  ‘காலையில் சாப்பிடவில்லை; பசி வயிற்றைக் கிள்ளுகிறது’
  ‘ஏழ்மையைப் பற்றிய அவருடைய கூரிய வருணனை நம் நெஞ்சைக் கிள்ளும்’

தமிழ் கிள்ளு யின் அர்த்தம்

கிள்ளு

பெயர்ச்சொல்

 • 1

  கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் தசையைப் பிடித்து வலிக்கும்படி நெருக்கும் செயல்.

  ‘அம்மாவுக்கு என்மேல் கோபம் வந்தால் தொடையில் நறுக்கென்று ஒரு கிள்ளு விழும்’