கிளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிளை1கிளை2கிளை3

கிளை1

வினைச்சொல்கிளைக்க, கிளைத்து

 • 1

  (மரத்திலிருந்து) பல பிரிவுகள் ஏற்படுதல்; கப்பு விடுதல்.

  ‘ஆலமரம் கிளைத்து அடர்த்தியாக இருந்தது’
  ‘மாமரம் இப்போது நன்றாகக் கிளைக்கத் தொடங்கியுள்ளது’

 • 2

  ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிதல்; பெருகுதல்.

  ‘குடும்பம் எப்படிக் கிளைத்துப் பெருகிவிட்டது!’
  ‘தேசியக் கட்சியிலிருந்து கிளைத்த சிறு கட்சிகள் பல’

கிளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிளை1கிளை2கிளை3

கிளை2

பெயர்ச்சொல்

 • 1

  தாவரத்தின் தண்டிலிருந்து பக்கவாட்டில் பிரிந்து இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் பகுதி.

  ‘மரத்தில் ஏறிக் கிளைகளை வெட்டிப் போடு!’
  ‘குரங்கு கிளைக்குக் கிளை தாவிச் செல்லும்’

 • 2

  (அலுவலகம், நிறுவனம், கட்சி முதலியவற்றின் தலைமையகத்தின் கீழ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு) வேறு இடத்தில் இயங்கும் பிரிவு.

  ‘எங்கள் வங்கியின் கிளைகள் நாடெங்கும் உள்ளன’
  ‘கிளை நூலகம்’

 • 3

  (ஒன்றின் துணையாக அமையும்) உட்பிரிவு.

  ‘கிளைக் கதை’
  ‘கிளைக் கேள்வி’

கிளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிளை1கிளை2கிளை3

கிளை3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் பன்மையில்) (சலிப்போடு குறிப்பிடும்போது) சிறுவர்.

  ‘இந்தக் கிளைகளைக் கூட்டிக்கொண்டு போனால் நாம் நிம்மதியாக இருக்க முடியாது’
  ‘இந்தக் கிளைகளைப் பெற்றுப்போட்டு நான் படும்பாடு ஆண்டவனுக்குத்தான் தெரியும்’
  ‘இந்தக் கிளைகளால்தான் பக்கத்து வீட்டுடன் எந்த நாளும் சண்டை’