தமிழ் கிழங்கு யின் அர்த்தம்

கிழங்கு

பெயர்ச்சொல்

 • 1

  சில வகையான தாவரங்களில் நிலத்திற்கு அடியில் வேரிலோ தண்டிலோ விளையும் திரட்சியான பகுதி/அந்தப் பகுதியைக் கொண்ட தாவர வகை.

  ‘உருளைக்கிழங்கு தண்டிலும் முள்ளங்கி வேரிலும் வளரும் கிழங்கு வகைகள் ஆகும்’
  ‘நீரிழிவு நோய் உள்ளவர்கள் கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது’
  ‘தாத்தாவுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் கிழங்குபோல் இருக்கிறார்’

 • 2

  (பூரி, சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடும்) உருளைக்கிழங்கோடு காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி.