தமிழ் கிழடு யின் அர்த்தம்

கிழடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வயதானவரை மரியாதை இல்லாமலோ அல்லது வயதான விலங்கை உதாசீனமாகவோ குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘இப்போது அந்தக் கிழடுக்குக் காதும் கேட்பதில்லை’
  ‘கட்டடத்திற்குக் காவலாக ஒரு கிழடைப் போட்டிருக்கிறார்கள்’
  ‘கிழட்டு வேலைக்காரன்’
  ‘கிழட்டு நாய் ஒன்று வாசலில் படுத்திருந்தது’
  ‘கிழட்டுச் சிங்கம்’