தமிழ் கிழமை யின் அர்த்தம்

கிழமை

பெயர்ச்சொல்

 • 1

  வாரத்தின் ஏழு நாட்களோடும் இணைத்துக் கூறப்படும் சொல்; வார நாளின் பொதுப் பெயர்.

  ‘இன்று என்ன கிழமை?’
  ‘அவர் புதன்கிழமை ஊரிலிருந்து திரும்பி வருவார்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு வாரம்.

  ‘என்னிடம் வாங்கிய காசை எத்தனை கிழமையில் தருவாய்?’
  ‘வருகிற கிழமை நீ எங்கள் வீட்டுப் பக்கம் வருவாயா?’
  ‘அடுத்த கிழமை நாங்கள் கதிர்காமம் போக உள்ளோம்’