கிழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிழி1கிழி2

கிழி1

வினைச்சொல்கிழிய, கிழிந்து, கிழிக்க, கிழித்து

 • 1

  (துணி, தாள் போன்றவை) ஓர் இடத்தில் பிரிதல் அல்லது பிரிந்து துண்டாதல்.

  ‘சண்டைக்குப் பின் இருவருடைய சட்டையும் வேட்டியும் கிழிந்து தொங்கின’
  ‘கிழிந்த பாவாடையை ஒட்டுப் போட்டுத் தைத்திருந்தாள்’
  ‘பனியன் கிழிந்துவிட்டது’
  உரு வழக்கு ‘வானம் கிழிந்து மழை கொட்டிற்று’

கிழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிழி1கிழி2

கிழி2

வினைச்சொல்கிழிய, கிழிந்து, கிழிக்க, கிழித்து

 • 1

  (துணி, காகிதம், தோல் முதலியவற்றைக் கையால் அல்லது ஒரு கருவியைப் பயன்படுத்தி) துண்டுகளாகுமாறு அல்லது பெரிதாக ஓட்டை விழுமாறு செய்தல்.

  ‘துணிக் கடையில் துணி கிழிப்பதுபோல் என்னால் கிழிக்க முடியாது’

 • 2

  கூரான பொருள் தோலில் உரசிக் காயம் ஏற்படுத்துதல்.

  ‘தகரம் கையைக் கிழித்துவிட்டது’

 • 3

  (கப்பல், ஏவுகணை முதலியவை ஒரு பரப்பை) ஊடுருவுதல்.

  ‘படகு நீரைக் கிழித்துக்கொண்டு சென்றது’
  ‘மேகத்தைக் கிழித்துப் பாய்ந்தது அந்த ஏவுகணை’

 • 4

  (தீக்குச்சியைத் தீப்பெட்டியில் வேகமாக) உரசுதல்.

  ‘எத்தனை தீக்குச்சியைத்தான் கிழிப்பது?’

 • 5

  (கோடு, கட்டம்) இழுத்தல்; வரைதல்.

  ‘சிறுவர்கள் விளையாடுவதற்காகத் தரையில் கோடு கிழித்துக்கொண்டிருந்தார்கள்’

 • 6

  (கேலியாகப் பேசும்போது) சாதித்தல்.

  ‘நீ இரண்டு வருஷமாகப் படித்துக் கிழித்தது போதும்’
  ‘காலையில் நான்கு மணிக்கே எழுந்து என்ன கிழிக்கப்போகிறாய்?’