கீற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கீற்று1கீற்று2

கீற்று1

பெயர்ச்சொல்

 • 1

  (வீடுகளுக்குக் கூரை போட அல்லது பந்தல் போடப் பயன்படும்) முடைந்த தென்னை ஓலை; கிடுகு.

  ‘கீற்றுக் கொட்டகை வெயிலுக்கு இதமாக இருந்தது’
  ‘தோப்பில் கீற்று முடைகிறார்கள்’

கீற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கீற்று1கீற்று2

கீற்று2

பெயர்ச்சொல்

 • 1

  (சில காய்கறிகளை அல்லது பழங்களை) நீளவாக்கில் அறுத்து எடுத்த துண்டு.

  ‘ஒரு பூசணிக் கீற்று வாங்கி வா’

 • 2

  (சூரிய ஒளியின்) கற்றை.

  ‘உடைந்த கண்ணாடியில் பிரதிபலித்த ஒளிக்கீற்று’
  உரு வழக்கு ‘நம்பிக்கையின் கீற்றுகள் தெரிந்தன’

 • 3

  (நெற்றியில், உடலில் இடப்பட்ட விபூதி, சந்தனம் முதலியவற்றின்) கோடு; வரி.

  ‘அவன் நெற்றியில் சந்தனக் கீற்று தெரிந்தது’