தமிழ் கீளி யின் அர்த்தம்

கீளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உடலின் மேற்பகுதியில் கோடுகளைக் கொண்ட, பழுப்பு நிறத்தில் இருக்கும் (உணவாகும்) சிறிய கடல் மீன்.

தமிழ் களி யின் அர்த்தம்

களி

வினைச்சொல்களிக்க, களித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பார்ப்பது, கேட்பது முதலியவற்றால்) இன்பம் அடைதல்; மகிழ்தல்.

  ‘வானொலியில் நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டுக் களித்தோம்’

தமிழ் களி யின் அர்த்தம்

களி

பெயர்ச்சொல்

 • 1

  கேழ்வரகு, கம்பு முதலியவற்றின் மாவை நீரில் கரைத்துக் காய்ச்சித் தயாரிக்கும், நீராகவோ கெட்டியாகவோ இல்லாமல் இருக்கும் உணவு.

  ‘உப்புமாவைக் களிபோல கிண்டி வைத்திருக்கிறாயே!’

 • 2

  உளுந்து மாவையும் பச்சரிசி மாவையும் கலந்து, கொதிக்கும் வெல்லப் பாகில் போட்டுக் கிளறிச் செய்யும் உணவு.

  ‘பிரசவித்த பெண்களுக்கு அந்தக் காலத்தில் களி கொடுப்பார்கள்’

தமிழ் களி யின் அர்த்தம்

களி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒப்பனைக்கான) முகப் பூச்சு, தலைச்சாயம் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுச்சொல்.

  ‘முகம் பளிச்சென்று இருக்கிறதே; என்ன களி பூசினாய்?’