தமிழ் குட்டிக்கரணம் யின் அர்த்தம்

குட்டிக்கரணம்

பெயர்ச்சொல்

  • 1

    (வேடிக்கை காட்டும் நோக்கத்தில்) தலையைத் தரையில் ஊன்றிக் கால்களைத் தலைக்கு மேலாக மறுபுறம் தூக்கிப்போட்டு விழுதல்.

    ‘குரங்கைக் குட்டிக்கரணம் அடிக்க வைத்துக் காசு வாங்கினான்’
    உரு வழக்கு ‘எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் என்று முதலில் சொல்லிவிட்டு இப்போது குட்டிக்கரணம் போடுகிறாயே!’
    உரு வழக்கு ‘நீ என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் வீட்டை நான் உனக்கு விற்பதாக இல்லை’