தமிழ் குட்டு யின் அர்த்தம்

குட்டு

வினைச்சொல்குட்ட, குட்டி

 • 1

  மடக்கிய விரல் முட்டியால் (தலையில்) குத்துதல் அல்லது (தலையின் பக்கவாட்டில்) தட்டுதல்.

  ‘வீட்டுக்கணக்கு செய்துகொண்டு வராத மாணவனின் தலையில் ஆசிரியர் ஓங்கிக் குட்டினார்’
  ‘பிள்ளையார் கோயில் முன் நின்று தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடாமல் அவர் போவதில்லை’

தமிழ் குட்டு யின் அர்த்தம்

குட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (தலையில்) விரல் முட்டியால் விழும் குத்து.

  ‘அம்மா தம்பியின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்தாள்’

தமிழ் குட்டு யின் அர்த்தம்

குட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (வெளிப்பட்டுவிடக்கூடிய) தவறான செயல்.

  ‘அமைச்சரின் செயலாளர் என்று கூறி வங்கியில் கடன் வாங்கினார். பிறகு குட்டு வெளிப்பட்டுக் கைதானார்’