தமிழ் குட்டை யின் அர்த்தம்

குட்டை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) உயரத்தில் குறைவு.

  ‘பையன் சற்றுக் குட்டைதான்’
  ‘குட்டையான மரம்’

தமிழ் குட்டை யின் அர்த்தம்

குட்டை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  குறைந்த அளவில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம்; (கரை இல்லாத) ஆழமற்ற குளம்.

  ‘ஆடுமாடுகள் இந்தக் குட்டையில் தண்ணீர் குடிக்க வரும்’
  ‘கழிவுநீர்க் குட்டை’

தமிழ் குட்டை யின் அர்த்தம்

குட்டை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கைக்குட்டை.

  ‘கையில் வைத்திருந்த குட்டை தரையில் விழுந்தது’
  ‘குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்’