தமிழ் குடம் யின் அர்த்தம்

குடம்

பெயர்ச்சொல்

 • 1

  (நீர் வைத்துக்கொள்ளவும் எடுத்துவரவும் பயன்படுத்தும்) குவிந்த கீழ்ப் பகுதியும் குறுகிய கழுத்துப் பகுதியும் உடைய (மண், உலோகம் முதலியவற்றால் ஆன) பாத்திரம்.

  ‘குடத்தில் ஓட்டை விழுந்துவிட்டது’

 • 2

  வண்டிச் சக்கரத்தை அச்சாணியில் பொருத்துவதற்கு உரிய துளை உள்ளதும் ஆரங்களைத் தாங்கியுள்ளதுமான உருளை வடிவப் பகுதி.

 • 3

  (கோட்டுவாத்தியம், வீணை, தம்பூரா முதலிய இசைக் கருவிகளில்) உருண்டையான உள்ளீடற்ற பகுதி.

  ‘வீணைக் குடம்’