குடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குடி1குடி2குடி3

குடி1

வினைச்சொல்குடிக்க, குடித்து

 • 1

  (பானத்தையோ திரவ உணவையோ வாய் வழியாக) உட்கொள்ளுதல்.

  ‘மருத்துவர் கஞ்சி மட்டும்தான் குடிக்கச் சொல்லியிருக்கிறார்’
  ‘கன்றுக் குட்டி முட்டிமுட்டிப் பால் குடிக்கிறது’

 • 2

  மது அருந்துதல்.

  ‘அவர் குடித்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது’

 • 3

  உறிஞ்சுதல்.

  ‘இந்தத் தாளில் எழுத வேண்டாம்; இது நிறைய மை குடிக்கிறது’
  ‘வடை எவ்வளவு எண்ணெய் குடித்திருக்கிறது பார்!’

 • 4

  (கார், பேருந்து போன்ற வாகனங்கள் பெட்ரோல் போன்றவற்றை) அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ளுதல்.

  ‘என் கார் மிக அதிகமாகப் பெட்ரோல் குடிக்கிறது’

 • 5

  (திரவம் அல்லாதவற்றைக் குறிப்பிடும்போது) (பீடி, சுருட்டு முதலியன) புகைத்தல்.

  ‘சிறு வயதிலேயே சிகரெட் குடிக்க ஆரம்பித்துவிட்டாயா?’

குடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குடி1குடி2குடி3

குடி2

பெயர்ச்சொல்

 • 1

  (மதுபானம்) குடித்தல் அல்லது குடிக்கும் பழக்கம்.

  ‘அவனுக்குக் குடிப் பழக்கம் கிடையாது’
  ‘குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை அழித்துக்கொண்டவர்கள் அநேகம்’

 • 2

  மதுபானம் குடிப்பதால் ஏற்படும் போதை.

  ‘குடியில் ஏதாவது உளறுவான்’

குடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குடி1குடி2குடி3

குடி3

பெயர்ச்சொல்

 • 1

  குடிமகன்; பிரஜை.

  ‘குடிகளின் நலனே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்’
  ‘குடிகளின் குறைகள் நீங்காவிட்டால் புரட்சி ஏற்படும்’

 • 2

  குடும்பம்.

  ‘குடி கெடுத்தவன் என்ற பெயர் வாங்காதே!’

 • 3

  உயர் வழக்கு குலம்.

  ‘ஆதிவாசிகள் ஒரு நாட்டின் மூத்த குடிகளாக இருக்கலாம்’
  ‘சோழர் குடிக்கு இழுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இராஜராஜ சோழன் கவனமாக இருந்தான்’

 • 4

  குடித்தனம்.

  ‘இந்த வீட்டில் எட்டுக் குடிகள்’