தமிழ் குடியிருப்பு யின் அர்த்தம்

குடியிருப்பு

பெயர்ச்சொல்

 • 1

  வசிப்பதற்காக ஒரே மாதிரியாகக் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு; வீடுகள் கொண்ட பகுதி.

  ‘சென்னைப் புறநகர்ப் பகுதியில் பல பெயர்களில் பல குடியிருப்புகள் இருக்கின்றன’
  ‘எங்கள் குடியிருப்பின் பெயர் ‘குறிஞ்சி’’

 • 2

  ஓர் இனத்தவர் அல்லது ஒரே தேசத்தைச் சார்ந்தவர் தமக்கென்று இருப்பிடங்கள் அமைத்துக்கொண்டு வாழும் பகுதி.

  ‘பழங்குடி மக்கள் குடியிருப்பு’
  ‘இலங்கை அகதிகள் குடியிருப்பு’