தமிழ் குடியேறு யின் அர்த்தம்

குடியேறு

வினைச்சொல்குடியேற, குடியேறி

 • 1

  (தம் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் பகுதியை விட்டு வேறொரு நாட்டுக்கு அல்லது பகுதிக்குச் சென்று) நிலையாகத் தங்குதல்.

  ‘அவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்’
  ‘கிராம மக்கள் வறட்சியின் காரணமாக நகரங்களில் குடியேறுகின்றனர்’

 • 2

  (வீட்டில்) குடிபுகுதல்.

  ‘இந்த வீட்டில் இன்னும் யாரும் குடியேறவில்லை’
  உரு வழக்கு ‘அவளுடைய கண்களில் சோகம் குடியேறியிருந்தது’