தமிழ் குடிவை யின் அர்த்தம்

குடிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (பெரும்பாலும் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் ஒரு வீட்டில்) குடும்பமாக வாழத் தேவையான ஏற்பாடு செய்துதருதல்.

    ‘எங்கள் தெருவிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மகளையும் மருமகனையும் குடிவைத்துவிட்டோம்’

  • 2

    (ஒருவரை ஒரு வீட்டில்) குடித்தனக்காரராக ஏற்றல்.

    ‘மாடியில் யாரைக் குடிவைத்திருக்கிறீர்கள்?’