குடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குடை1குடை2

குடை1

வினைச்சொல்குடைய, குடைந்து

 • 1

  (சில பறவைகள், வண்டு முதலியவை மரத்தை அல்லது எலி, மண்புழு போன்றவை நிலத்தை) துளைத்து ஊடுருவுதல்.

  ‘சில வண்டுகள் மரத்தையும் குடைந்துவிடும்’
  ‘மண்ணைக் குடைந்து செல்லும் மண்புழு’

 • 2

  (கருவியால் மரச் சாமான்களை அல்லது மலை, பாறை போன்றவற்றை) துளைத்தல்.

  ‘மலையைக் குடைந்து ரயில்பாதை அமைக்கத் திட்டம்’
  உரு வழக்கு ‘பழைய நினைவுகள் அவன் மனத்தைக் குடைந்தன’

 • 3

  (பாறையை) செதுக்குதல்.

  ‘பாறையைக் குடைந்து பல்லவர்கள் செதுக்கிய அழகழகான சிற்பங்கள்’

 • 4

  (விரலாலோ குச்சியாலோ) கிண்டுதல்; நோண்டுதல்.

  ‘பலர் இருக்கும்போது மூக்கைக் குடையாதே!’
  ‘சாவியைத் தொலைத்துவிட்டதால் கம்பியால் பூட்டைக் குடைய வேண்டியதாகிவிட்டது’
  ‘குச்சியை வைத்துக் காதைக் குடையாதே’

 • 5

  துளைப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.

  ‘கால் குடைகிறது’

 • 6

  ஒரு பழக்கம்போல எப்போதும் எதையாவது பழுதுபார்த்தல், இயந்திரங்களைச் சரிசெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருத்தல்.

  ‘அவரால் சற்று நேரம்கூடச் சும்மா இருக்க முடியாது; எதையாவது குடைந்துகொண்டே இருப்பார்’
  ‘நேற்று நான் அவனைப் பார்க்கப் போனபோது தையல் இயந்திரத்தைக் குடைந்துகொண்டிருந்தான்’

 • 7

  (திரும்பத்திரும்பக் கேள்வி கேட்டு) விசாரித்தல்.

  ‘புலனாய்வுத் துறை அதிகாரிகள் கேள்விமேல் கேள்வி கேட்டு அவனைக் குடைந்ததற்குப் பலன் ஏதும் இல்லை’

குடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குடை1குடை2

குடை2

பெயர்ச்சொல்

 • 1

  மடக்கி விரிக்கக்கூடிய கம்பிகளால் ஆன ஒரு அமைப்பின் மேல் (பெரும்பாலும் கறுப்பு நிற) துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக்கொள்வதற்காகக் கையில் பிடித்துக்கொள்ளும் சாதனம்.

 • 2

  (உற்சவமூர்த்தி வீதி உலா வரும்போது அல்லது மகான்களை வரவேற்கும்போது உயர்த்திப் பிடிக்கப்படும்) வண்ணத் துணிகளால் அமைக்கப்பட்ட, பெரிய அலங்கார அமைப்பு.