குண்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குண்டு1குண்டு2குண்டு3

குண்டு1

பெயர்ச்சொல்

 • 1

  1. 1.1 சதைப்பற்று மிகுந்து திரட்சியாக இருப்பது

   ‘குண்டுக் கத்திரிக்காய்’
   ‘பையன் குண்டாக இருக்கிறான்’
   ‘குண்டான ஆள்’

 • 2

  1. 2.1 (முற்காலத்தில் பீரங்கியில் பயன்படுத்திய) இரும்பு உருண்டை

  2. 2.2 (தீப் பிடிக்கும் ரசாயனப் பொருள் அடங்கிய) வெடிக்கும் உலோக ஆயுதம்

   ‘விமானம் குண்டுகள் வீசி ஆயுதக் கிடங்கை அழித்தது’

  3. 2.3 (துப்பாக்கியில் போட்டு விசையால் வெளியேற்றும்) மூடியிட்ட உலோகக் குப்பி; தோட்டா; ரவை

   ‘துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணம்’

  4. 2.4 (விளையாட்டில்) (கையால் எறியும்) உலோக உருண்டை

   ‘தோளையும் கழுத்தையும் ஒட்டியவாறு குண்டை ஏந்தி அதை எறியத் தயாராகப் போட்டியாளர் நின்றிருந்தார்’

  5. 2.5 (கோலி விளையாட்டில் பயன்படுத்தும்) கண்ணாடியால் ஆன உருண்டை வடிவப் பொருள்

  6. 2.6 (தாலியில் கோக்கப்படும்) சிறு தங்க உருண்டை

குண்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குண்டு1குண்டு2குண்டு3

குண்டு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குண்டம்.

  ‘வேள்விக் குண்டு’

குண்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குண்டு1குண்டு2குண்டு3

குண்டு3

பெயர்ச்சொல்

 • 1

  மஞ்சள் நிறத் தோலையும் நாரில்லாத சதையையும் கொண்ட, உருண்டையாக இருக்கும் மாம்பழ வகை.