தமிழ் குணம் யின் அர்த்தம்

குணம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக இருக்கும்) இயல்பு; பண்பு.

  ‘அக்கா தங்கை இருவருக்கும் ஒரே குணம்!’
  ‘அவசரப்படாமல் நிதானமாகப் பிரச்சினையை அலசுவது அவருடைய குணம்’

 • 2

  (பொறுமை, அடக்கம் போன்ற) இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.

  ‘குணமான பெண்’

 • 3

  (மூலிகை, மருந்து போன்றவற்றுக்கு இருக்கும்) நோய் தீர்க்கும் அல்லது குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும் தன்மை.

  ‘வேப்பெண்ணெய்க்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் குணம் உண்டு’

தமிழ் குணம் யின் அர்த்தம்

குணம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (நோய் நீங்கிப் பெறும்) சுகம்; நலம்பெறுதல்.

  ‘இந்த மருந்தைச் சாப்பிட்டால் மூன்று நாளில் குணம் தெரியும் என்று வைத்தியர் கூறினார்’
  ‘பணம்தான் செலவழிகிறதேயொழிய வியாதி குணமாகிற வழியைக் காணோம்’

தமிழ் குணம் யின் அர்த்தம்

குணம்

பெயர்ச்சொல்-ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அறிகுறி.

  ‘மழை வரும் குணமாகக் கிடக்கிறது. குடை எடுத்துக்கொண்டு போ’
  ‘என்ன, இன்றைக்கு மழைக் குணத்தைக் காணவில்லை’