தமிழ் குத்தகை யின் அர்த்தம்

குத்தகை

பெயர்ச்சொல்

 • 1

  உரிமையாளர் தனது நிலத்தை மற்றொருவர் பயிரிடுவதற்கு அனுமதித்து, விளைச்சலில் ஒரு பங்கையோ அதற்கு ஈடான பணத்தையோ பெற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான ஒப்பந்தம்.

  ‘இரண்டு ஏக்கர் தவிர மற்ற நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டிருக்கிறேன்’
  ‘கோயில் மனைகள் இருபது ஆண்டு களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன’
  ‘ஊராட்சி மன்றத்துக்கு மீன் குத்தகைமூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது’

 • 2

  சாகுபடி செய்யும் உரிமையை அளித்ததற்காகப் பெறப்படும் தானியம் அல்லது அதற்கு ஈடான பணம்.

  ‘அவர் குத்தகை நெல்லை வசூலிப்பதற்காக ஒருவரை நியமித்திருந்தார்’
  ‘தோப்புக் குத்தகை இன்னும் வந்து சேரவில்லை’