தமிழ் குத்தல் யின் அர்த்தம்

குத்தல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஊசியால் குத்துவதைப் போன்ற) கடுமையான வலி.

  ‘தலைக் குத்தல்’
  ‘உடம்பில் குத்தலும் குடைச் சலுமாக இருக்கிறது’

 • 2

  (பேச்சால், எழுத்தால் ஒருவருடைய மனம் புண்படும் விதத்தில்) குத்திக்காட்டும் செயல்.

  ‘‘சம்பளத்தில் எப்போதும் நூறு ரூபாய் குறைகிறது. யாருக்குப் போகிறதோ!’ என்று மனைவி குத்தலாகப் பேசுவது அவனை ஆத்திரப்பட வைத்தது’