தமிழ் குத்துக்கால் யின் அர்த்தம்

குத்துக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (‘உட்கார்’ என்னும் வினையோடு) முழங்காலை மடித்து முகத்துக்கு முன் கொண்டுவந்து இடுப்பின் கீழ்ப் பகுதி தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைத்திருக்கும் நிலை.

    ‘அவள் குத்துக்காலிட்டபடி உட்கார்ந்து பாத்திரம் தேய்த்தாள்’
    ‘எனக்குப் பக்கத்தில் ஒரு முதியவர் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருந்தார்’