தமிழ் குத்தூசி யின் அர்த்தம்

குத்தூசி

பெயர்ச்சொல்

 • 1

  (மூட்டையைப் பிரிக்காமல் உள்ளிருக்கும் தானிய மணியின் தரத்தை அறியப் பயன்படுத்தும்) கூரிய நுனியும் தானியம் வருவதற்கான குழிந்த பகுதியும் கொண்ட ஊசி போன்ற இரும்புக் கம்பி.

 • 2

  (தென்னங்கீற்றுகளால் கூரை வேயப் பயன்படுத்தும்) இருபுறமும் கூர்மையாகச் சீவிய மூங்கில் துண்டு.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு கூரிய முனையின் நுனியில் சிறிய ஓட்டையோடு இருக்கும் இரும்புக் கம்பி.

  ‘வேலி அடைக்க குத்தூசி எடுத்துக்கொண்டு வா’
  ‘குத்தூசியில் இழைக்கயிற்றை வடிவாகக் கோத்துக் கொடு’