தமிழ் குதப்பு யின் அர்த்தம்

குதப்பு

வினைச்சொல்குதப்ப, குதப்பி

  • 1

    (வெற்றிலை, பாக்கு, மிட்டாய் முதலியவற்றை) வாய்க்குள் அடக்குதல்; (கடிக்காமல்) சப்புதல்.

    ‘வாயில் இவ்வளவு வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு அவரால் எப்படிப் பேச முடிகிறது?’
    ‘வாயில் எச்சில் வடித்தவாறு குழந்தை மிட்டாயைக் குதப்பிக்கொண்டிருந்தது’