தமிழ் குதறு யின் அர்த்தம்

குதறு

வினைச்சொல்குதற, குதறி

  • 1

    (பற்களால் கடித்து) உருக்குலையும்படி பிய்த்தல்; (கிழித்து) நாசப்படுத்துதல்.

    ‘பூனை எலியைக் கடித்துக் குதறிவிட்டது’
    ‘நாய் செருப்பை எடுத்துப்போய்க் குதறிப்போட்டுவிட்டது’
    உரு வழக்கு ‘விமர்சனம் என்ற பெயரால் கதையை அவர் குதறியெடுத்துவிட்டார்’