குதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குதி1குதி2குதி3

குதி1

வினைச்சொல்குதிக்க, குதித்து

 • 1

  (காலால் உந்தி) மேல் எழும்பிக் கீழே வருதல்; (உயரமான இடத்திலிருந்து) கீழே பாய்தல்.

  ‘சிறுவர்கள் நீரில் குதித்து விளையாடினார்கள்’
  ‘கங்காரு குதித்து ஓடினாலும் குட்டி விழுந்துவிடாது’
  ‘பத்து மாடிக் கட்டடத்திலிருந்து குதித்தால் மரணம்தான்’

 • 2

  (திடீரென்று ஒன்று அல்லது ஒருவர்) தோன்றுதல்.

  ‘இந்த அரிய யோசனை உனக்கு எங்கிருந்து வந்து குதித்தது?’
  ‘அவன் மட்டும் என்ன சீமையிலிருந்து வந்து குதித்தானா?’

 • 3

  (ஒன்றில் திடீரென்று) ஈடுபடுதல்; இறங்குதல்.

  ‘சினிமா நடிகை தேர்தலில் குதிக்கப்போவதாக அறிவித்தார்’
  ‘தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்’

 • 4

  (உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவரின் நடத்தையைக் குறிப்பிடும்போது) ஆர்ப்பாட்டம் செய்தல்.

  ‘பணத்தைக் காணோம் என்று அப்பா ஒரேயடியாகக் குதிக்கிறார்’
  ‘கோபப்பட்டுக் குதித்துப் பயன் இல்லை’

குதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குதி1குதி2குதி3

குதி2

பெயர்ச்சொல்

 • 1

  (காலால் உந்தி) ஒரு முறை எழும்பிக் கீழே வருதல்.

  ‘தெருக்கூத்துக் கலைஞரின் குதியும் துள்ளலும் பார்க்கப் பரவசமாக இருந்தன’

குதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குதி1குதி2குதி3

குதி3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குதிகால்.

  ‘குதி உயர்த்திய சப்பாத்தை அவள் அணிந்திருந்தாள்’