தமிழ் குதிகால் யின் அர்த்தம்

குதிகால்

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளங்காலின் (குழிவை ஒட்டிய) பின்பகுதி.

  • 2

    செருப்பு, காலுறை முதலியவற்றில் மேற்குறிப்பிட்ட காலின் பகுதி படும் இடம்.

    ‘குள்ளமான பெண்கள் குதிகால் உயர்ந்த காலணியை விரும்புகிறார்கள்’
    ‘காலுறையில் குதிகால் பகுதி கிழிந்துவிட்டது’