தமிழ் குந்து யின் அர்த்தம்

குந்து

வினைச்சொல்குந்த, குந்தி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு குத்துக்காலிடுதல்.

  ‘கைதிகள் குந்தியிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்’

தமிழ் குந்து யின் அர்த்தம்

குந்து

பெயர்ச்சொல்

 • 1

  இரும்பு அல்லது மரச் சட்டம் தரையில் கீறலை ஏற்படுத்தாமல் இருக்க அந்தச் சட்டத்துடன் இணைக்கும், ரப்பர் போன்ற பொருளினால் ஆன சிறு வளையம்.

  ‘நாற்காலிக்குப் புதிய குந்துகள் பொருத்த வேண்டும்’

தமிழ் குந்து யின் அர்த்தம்

குந்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு திண்ணை.

  ‘வீட்டுக் குந்தில் இருந்து தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தாள்’

தமிழ் குந்து யின் அர்த்தம்

குந்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பழம், கிழங்கு போன்ற வற்றின்) நார்.

  ‘பனம்பழத்தைச் சூப்பியதால் பல் இடுக்கில் குந்து புகுந்துவிட்டது’
  ‘மாம்பழக் குந்து’
  ‘பலாப் பழக் குந்து’